close
Choose your channels

'விஸ்வரூபம் 2' படம் குறித்து கமல்ஹாசனின் முக்கிய அறிவிப்பு

Sunday, April 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பித்துவிட்டதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். எனவே இந்த படம் வெகுவிரைவில் வெளியாக வாய்ப்புள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கமல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

'விஸ்வரூபம் 2' படத்தின் முழு உரிமையையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எடுத்துள்ளதாகவும், இவ்வருடத்திற்குள் இந்த படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் இந்த தகவல் கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் வைத்திருந்தது என்பதும் இந்த படத்தின் உரிமையை பெற ராஜ்கமல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.