close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிய '54321'த்ரில்லர்

Thursday, July 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கும் முதல் படம் 54321. இந்த படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கும் நிலையில், டைட்டில் குறித்து விளக்கமளித்துள்ள இயக்குனர், இந்த படத்தில் 5 கேரக்டர், 4 லைப் ஸ்டைல், 3 கொலைகள், 2 மணி நேரம் மற்றும் 1 பழிவாங்குதல் ஆகியவை இருப்பதால் இந்த டைட்டில் வைத்ததாகவும், இந்த படத்தின் கதை இரண்டு மணி நேரங்களில் நடப்பதாக அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமாக அமைந்துள்ள இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் 'நெருங்கி வா முத்தமிடாதே' படத்தில் நடித்த ஷபீர் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை தயாரிக்கு கண்ணன் என்பவர், மனநல மருத்துவராக நடித்திருப்பதாக கூறிய ராகவேந்திர பிரசாத், இந்த படத்தை முழுவதும் முடித்த பின்னர் படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் போட்டு காட்டியதாகவும், அவர் படத்தை பார்த்து மிகவும் பாராட்டியதாகவும் கூறியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.