close
Choose your channels

'பாட்ஷா' 2-ஆம் பாகத்தால் பாதிக்கப்பட்டாரா ஜி.வி.பிரகாஷ்?

Thursday, July 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது விஜய் நடிக்கும் விஜய் 59" உள்பட பல படங்களில் பிசியாக இசையமைத்து கொண்டிருந்தாலும், இடையிடையே நாயகனாக படங்களிலும் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.


ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் டைட்டிலாக 'பாட்ஷா என்கிற ஆண்டனி' என்று வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த டைட்டிலை படக்குழுவினர் மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' படத்தயாரிப்பு நிறுவனம், 'பாட்ஷா என்கிற ஆண்டனி' படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதாகவும், அந்த நிறுவனம் விரைவில் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதால், அந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்ததை அடுத்து, படக்குழுவினர் தற்போது வேறு டைட்டிலை யோசித்து வருகின்றானர்.

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.