close
Choose your channels

தென்னிந்திய திரையுலகின் முதல் முயற்சி: தளபதியின் மெர்சலுக்கு கிடைத்த பெருமை

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' குறித்த சிறப்பு அப்டேட் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம். இந்த நிலையில் அந்த சிறப்பு அப்டேட் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

இதன்படி மெர்சல் படக்குழுவினர் டுவிட்டர் இணையதளத்துடன் இணைந்து சிறப்பு எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளனர். உங்கள் டுவிட்டர் பக்கத்தில் #mersal என்று டைப் செய்தாலே அந்த எமோஜியும் சேர்ந்து தோன்றும். தென்னிந்திய திரைப்படங்களில் டுவிட்டரில் எமோஜி வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் இந்தியாவுடன் இணைந்து எமோஜியை வெளியிடுவதில் பெருமை கொள்வதாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களை முழு அளவில் பயன்படுத்தி வரும் 'மெர்சல்' படக்குழுவினர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.