close
Choose your channels

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா எப்போது? பொதுப்பணி துறை அதிகாரிகள் தகவல்

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மணிமண்டபம் குறித்து சிவாஜி சமூக நலப்பேரவை சந்திரசேகரன் கூறியபோது, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சாதாரண நடிகர் அல்ல, அவர் தமிழ்க்கலையின் அடையாளம். அவருக்கு கட்டப்படும் இந்த மண்டபம் அவரது புகைப்படங்கள் நிரம்பிய ஒரு மண்டபமாக இல்லாமல் அவர் நடித்த படங்கள் எந்த நேரமும் திரையிடப்பட்டு கொண்டிருக்கும் வகையில் இருக்க வேண்டும்
திரைத்துறைக்கு வரும் புதியவர்கள் சிவாஜியின் நடிப்பை அறிந்து கொள்ளும் வகையில் இந்த மண்டபம் சிறப்பாக இருக்க வேண்டும். மணிமண்டபத்தின் உள்ளே சென்றாலே ஒரு கலைக்கோவிலுக்கு செல்லும் உணர்வு ஏற்படும் வகையில் அமைய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டவுடன் சென்னை மெரீனாவில் உள்ள சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.