close
Choose your channels

இதுவரை நடிக்காத முக்கிய வேடத்தில் நயன்தாரா?

Monday, April 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு கிடைத்த பட்டத்திற்கு ஏற்ப நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டோரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

அதேபோல் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடித்த 'அறம்' திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம் ஆகிய நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நயன்தாரா இதுவரை ஏற்று நடிக்காத தடகள வீராங்கனை கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் ரியலாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் தடகள பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் இந்த ஆண்டு அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.