close
Choose your channels

பிக்பாஸ் 100வது நாளில் ஓவியா: ரசிகர்கள் உற்சாகம்

Monday, September 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா இடையிலேயே மனநிலை காரணமாக வெளியேறிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவே இல்லை. ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சியில் பல மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும் ஓவியா இருந்தபோது இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை

மேலும் ஓவியாவின் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்படும் டுவீட்டுக்கு லைக்குகள் குவிகிறதில் இருந்தே அவர் மீது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பு எள்ளளவும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஓவியா தனது டுவிட்டரில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். ஏராளமான ரசிகர்கள் டுவிட்டரில் லைவ் சாட் செய்யும்படி என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் பிக்பாஸ் 100வது நாளில் ரசிகர்களிடம் லைவ் சாட் செய்யவுள்ளேன்' என்று அறிவித்துள்ளார். பிக்பாஸ் 100வது நாளில் டைட்டிலை வெற்றி பெறுபவர் யார் என்பதை அறிவதை விட ஓவியாவின் லைவ் சாட்டுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.