close
Choose your channels

இயக்குனராக மாறும் பிரபல இசையமைப்பாளர்

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறி ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அதேபோல் நடிகரான சிம்பு இசையமைப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இயக்குனராக மாறியுள்ளார்.

விஜயகாந்த்-சூர்யா நடித்த 'பெரியண்ணா' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த பரணி தான் தற்போது இயக்குனராக மாறியுள்ளார். 'ஒண்டிக்கட்ட' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 'தெனாவட்டு' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக 'உச்சத்துல சிவா', 'இவனுக்கு தண்ணியில கண்டம்' ஆகிய படங்களில் நடித்த நேஹா நடிக்கவுள்ளார். மேலும் தொலைக்காட்சியில் பிரபலமான முல்லை-கோதண்டம், மற்றும் மதுமிதா ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

சுமார் 40 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள பரணி இயக்கவுள்ள 'ஒண்டிக்கட்ட' படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெரும் சம்பவங்கள் படம் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் சந்தித்தவையாக இருக்கும் என்று இயக்குனர் பரணி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.