close
Choose your channels

டாம் குரூஸ் அடுத்த படத்தில் பிரியங்கா சோப்ரா?

Saturday, April 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய நடிகைகள் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் முன்னணி நடிகர்களுடன் இணணந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான வின் டீசல் நடித்த 'XXX எக்ஸேண்டர் கேஜ்' படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்து வரும் 'மிஷன் இம்பாசிபிள்' படத்தின் 6ஆம் பாகத்தில் நாயகியாக நடிக்க, பிரியங்கா சோப்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாம் குரூஸ் படத்தில் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு என்பதால் பிரியங்கா இந்த வாய்ப்பை மிஸ் செய்ய மாட்டார் என்றே கூறப்படுகிறது.

இன்னும் ஒருசில மாதங்களில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெறவுள்ளதாகவும், அந்த சமயத்தில் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.