close
Choose your channels

ஆர்.கே.சுரேஷின் புதிய பட டைட்டில் அறிவிப்பு

Wednesday, June 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், அதன் பின்னர் 'மருது', 'தர்மதுரை', ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று சுமார் ஐந்து படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் விக்ரம் நடித்து வரும் 'ஸ்கெட்ச்' படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

இந்த நிலையில் இன்று ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது. 'தென்னாட்டான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஜய்பாண்டி என்பவர் இயக்க திவிஷ்யா ரேஷ்மா சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது சமூக இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.