close
Choose your channels

சன்னிலியோனை பின்னுக்கு தள்ளிய ரஜினி நாயகி

Wednesday, August 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 'கபாலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே, சன்னிலியோனை பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு கூகுள் தேடலில் இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்த சன்னிலியோன், 2015ஆம் ஆண்டின் ஆறு மாத காலத்தில் இரண்டாம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருடைய முதலிடத்தை நடிகை ராதிகா ஆப்தே கைப்பற்றியுள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது, அவர் நடித்த 'அகல்யா' என்ற குறும்படத்தை இணையதளத்தில் மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டது ஆகியவையே ராதிகா ஆப்தேவை முதலிடத்திற்கு கொண்டு சென்றது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரஜினிக்கு ஜோடியாகவும் அவர் நடிக்கவுள்ளதால் அவரை பற்றிய பரபரப்பான செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனால் இன்னும் சில மாதங்களுக்கு ராதிகா ஆப்தே தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.