close
Choose your channels

ரிலீசுக்கு முன்பே சாதனையை தொடங்கியது 'கபாலி'

Wednesday, April 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விஜய்யின் 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி'யும் ரிலீஸுக்கு முன்னரே தனது சாதனையை தொடங்கிவிட்டது.


'கபாலி' திரைப்படம் இந்தோனேஷியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் இவ்வளவு அதிகளவு தியேட்டர்களில் அந்நாட்டில் ரிலீஸ் ஆனதில்லை என்ற நிலையில் 'கபாலி' இந்த சாதனையை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'கபாலி' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 'அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கியுள்ள இந்த திரைப்படம் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.