close
Choose your channels

இதய நோயாளியுடன் ரஜினி. ஒரு உணர்ச்சிமயமான சந்திப்பு

Saturday, November 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ரஜினிகாந்த், தனது மலேசிய ரசிகர்களை சந்தித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அவரது தீவிர ரசிகை ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் ரஜினி மலேசியா வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த ரஜினி, சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகையை நேரில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு உணர்ச்சிமயமாக இருந்ததாகவும், மலேசிய ரசிகையும், அவரது குடும்பத்தினர்களும் ரஜினியின் வருகை குறித்து மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.