close
Choose your channels

ரஜினி அரசியலுக்கு வரட்டும்! ஆனால் முதல்வர் ஆகக்கூடாது: சீமான்

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்தித்தபோது இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் ஆகியோர்கள் குறித்தும் குறிப்பிட்டார். இந்த நிலையில் தன்னை பற்றி புகழ்ந்து பேசிய போதிலும் ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான். அவர் கூறியவற்றின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்:

ரஜினி கூறிய'நிர்வாக அமைப்பு தவறாக இருக்கிறது' என்ற கருத்தை ஏற்கிறேன். இதை நான் நீண்டகாலமாக பேசி வருகிறேன். அடிப்படை மாற்றத்தோடு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். இந்தக் கட்டடத்துக்கு வெள்ளை அடிப்பதைவிட, புதிய கட்டடம் எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த அமைப்பில் அனைத்துமே தவறாக இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் என்ன செய்வாரோ, அதைவிட ஆயிரம் மடங்கு நாங்கள் செய்வோம். நான் தமிழனாகவே கரைந்துவிட்டேன் என்கிறார். நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை என் அளவுக்கு உங்களால் நேசிக்க முடியாது. எனக்கு என்னுடைய வரலாறும் மொழியும் பண்பாடும் தெரியும். என் மண்ணின் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை நான் அறிந்து வைத்திருக்கிறேன். என்னுடைய தாய், தந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னால் செய்து கொடுக்க முடியும். அதை உங்களால் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய வாதம்.

ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும். இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். அவர் படத்தின் முதல் காட்சி பார்க்கும் ரசிகராகவும் இருப்போம். அதுவேறு. எங்கள் அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ், மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வருகிறார். நீங்களும் அப்படிச் செய்யுங்கள். இளைஞர்களிடம் பேசுங்கள். சேவையின் மனப்பான்மையை எடுத்துக் கூறுங்கள். அதைவிடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்.

ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை' இவ்வாறு சீமான் சீற்றத்துடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.