close
Choose your channels

அரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் ரஜினி-தனுஷ் பட நாயகி

Sunday, June 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'துருவங்கள் 16' என்ற வெற்றி படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான 'நரகாசுரன்' படத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளார் என்பதையும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த பட்டியலுடன் கூடிய போஸ்டர் இன்று அரவிந்தசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் 'நரகாசுரன்' படத்தின் நாயகி உள்பட முக்கிய நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த பட்டியலுடன் கூடிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி' மற்றும் தனுஷின் 'திருவிளையாடல் ஆரம்பம், குட்டி உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஸ்ரேயா சரண் இந்த படத்தின் நாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடங்களில் 'மாநகரம்' உள்பட பல படங்களில் நடித்த சந்தீப் கிஷான் மற்றும் இந்திரஜித் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் 'துருவங்கள் 16' படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சுஜித் சரங், எடிட்டர் ஸ்ரீஜித் சரங் ஆகியோர் இந்த படத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு ரான் எதான் யோஹான் இசையமைக்கின்றார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'மாயா' படத்திற்கு திகில் இசையை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.