close
Choose your channels

ரஜினி, அஜித்துடன் இணைந்த சிம்பு

Tuesday, April 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகிற்கு வரும் மே மாதம் 1ஆம் தேதி ஒரு முக்கிய நாளாக அமையவுள்ளது. அன்றைய தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரமாண்டமான திரைப்படமான 'கபாலி' திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. 'லிங்கா' படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பின் வரும் ரஜினி படத்தின் டீசர் என்பதால் இந்த டீசருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் மே 1ஆம் தேதி என்பது தல அஜித்தின் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஒரு மாதமாக அஜித் ரசிகர்கள் தங்கள் தலைவரின் பிறந்த நாளை அட்வான்ஸாக கொண்டாடி வரும் நிலையில் மே 1ஆம் தேதி சமூக வலைத்தளங்களை வாழ்த்துக்களால் ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதே நாளில்தான் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஆதிக் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

எனவே மே 1ஆம் தேதி ரஜினிகாந்த், அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கவுள்ளனர் என்பது மட்டும் உறுதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.