close
Choose your channels

சிம்புவின் 'வாலு'வுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Wednesday, August 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பலவிதமான தடைகளை தாண்டி சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெற்றிகரமாக உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் வெளிவர உதவி செய்த அனைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

முதலில் மூன்று வருடங்களாக தனது படம் எதுவும் வராமல் இருந்தபோதும் தன்னை மறக்காமல் தன்னுடைய படத்தை பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் தனது ரசிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள சிம்பு, அடுத்தகட்டமாக 'வாலு' திரைப்படத்தை திரையிட முன்வந்த அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் 'வாலு' படத்தின் ரிலீஸுக்கு பல திரையுலக பிரபலங்கள் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்புவுக்கு போன் செய்து படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூன்று பாடல்களை எழுதிய மதன்கார்க்கி வாலு ரிலீஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த வாசுகி பாஸ்கர், வாலு படத்தின் ரிலீஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பலர் சமூக வலைத்தளத்தில் சிம்புவுக்கு தங்கள் வாழ்த்துக்களை குவித்து கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் 'வாலு' படத்திற்கு முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு மிக வேகமாக முன்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும், முன்பதிவு செய்யப்படும் வேகத்தை பார்த்து காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.