close
Choose your channels

இசையமைப்பாளர் அவதாரத்தில் பிரபல பாடகர்

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவது, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆவதும் இயக்குனர் தயாரிப்பாளர் ஆவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது பாடகர் ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.

பிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் தற்போது இசையமைப்பாளர் ஆகியுள்ளார். 'கதாநாயகன்' படத்திற்கு பின்னர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே பாடகர் கிரிஷ் ஒருசில படங்களில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகர், நடிகரை அடுத்து இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் கிரிஷுக்கு நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.