close
Choose your channels

'முடியாது' என்ற வார்த்தையே அஜித்திடம் இருந்து வந்ததில்லை. சிவா

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'அஜித் 25' என்ற நிகழ்ச்சி நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில் அஜித் குறித்து காஜல் அகர்வால், இயக்குனர் சிவா, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் கூறியது ஒளிபரப்ப்பாகியுள்ளது.

எந்த நடிகரிடமும் இல்லாத ஒரு தன்மை அஜித்திடம் இருக்கின்றது என்றால் அது என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த காஜல் அகர்வால், 'அவர் ஒரு அற்புதமான மனிதர். அவருடைய இயல்பான அணுகுமுறையை இதுவரை நான் யாரிடமும் பார்த்தது இல்லை' என்று கூறினார். இயக்குனர் சிவா கூறியபோது, 'விடாமுயற்சியின் ஒட்டுமொத்த உருவம் அஜித். முடியாது என்று அவர் ஒருமுறை கூட சொன்னதே இல்லை' என்று கூறினார். 25 வருடங்கள் ஒரு ஹீரோவாக இருப்பது மிகப்பெரிய சாதனை என்று இயக்குனரும் நடிகருமான சுரேஷ்மேனன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.