close
Choose your channels

ரஜினிக்கு அரசியல் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு எதிராகவும், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு எதிரகாவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட கமல் ஒரு அகங்காரம் பிடித்த முட்டாள் என்று கூறிய சுவாமி, இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினியை ஒரு கோழை என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு கமல், ரஜினி ரசிகர்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி குறித்து சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ரஜினிக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறிய சுவாமி, தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் நல்ல நடிகர்கள் என்று கூறியுள்ளார்.

ரஜினி குறித்த சுவாமியின் விமர்சனத்திற்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.