close
Choose your channels

ரஜினி படங்களை அடுத்து அதிகபட்ச திரையரங்களில் சூர்யாவின் 'சி 3'

Tuesday, February 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'சி 3' திரைப்படம் வெளியாகவுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்து மாநிலங்கள் வாரியாக தற்போது பார்ப்போம். தமிழகத்தில் 'சி 3' திரைப்படம் 480 திரையரங்குகளிலும், தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 820 திரையரங்குகளிலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 260 திரையரங்குகளிலும், மும்பையில் 100 திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாகிறது. மேலும் இந்த படம் வெளிநாடுகளில் 250 திரையரங்குகளில் வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை அடுத்து அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் சூர்யா படங்களின் அதிகபட்ச வசூலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.