close
Choose your channels

சூரிக்கு அஜீத் கூறிய அட்வைஸ்

Friday, August 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யுடன் ஜில்லா படத்தில் இணைந்து நடித்த காமெடி நடிகர் சூரி, தற்போது தல அஜீத்துடன் 'தல 56' படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அஜீத்துடன் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சூரி சமீபத்தில் கூறியபோது, 'ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு கேரக்டராக நாம் மாறலாம். ஆனால் நம்முடைய ஒரிஜினல் கேரக்டர் எப்போதும் மாற கூடாது' என அஜீத் அட்வைஸ் செய்ததாக அவர் கூறியுள்ளார்.


சினிமாவுக்கு நடிக்க வரும் ஒவ்வொருவருக்கும் அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். விஜய் அண்ணாவுடன் ஜில்லா படத்தில் நடித்து முடித்தவுடன் என்னுடைய வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் எப்போது அஜீத்துடன் நடிக்க உள்ளீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தார்கள். அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.

நான் அஜீத்துடன் இரண்டு நாட்கள் மட்டுமே 'தல 56' படத்தில் நடித்தேன். 'நீ நீயாகவே இரு. மற்றவர்களுக்காக நீ எந்த நிலையில் உன்னுடைய தனித்தன்மையில் இருந்து மாறாதே. உன்னுடைய வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் உன்னுடைய பர்சனாலிட்டி என்றும் மாறக்கூடாது' என்று அஜீத் கூறியதாக சூரி தெரிவித்துள்ளார்.

'தல 56' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிக விரைவில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் தொடங்கும் என்றும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.