close
Choose your channels

'விவேகம்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கு திமுக எம்.எல்.ஏ பாராட்டு

Friday, February 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் அஜித்தின் அட்டகாசமான கெட்டப்பிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.வும் ஆன ஜெ.அன்பழகன், அஜித்தின் 'விவேகம்' பட ஃபர்ஸ்ட்லுக்கை தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'ஒரு வருடம் காத்ததற்கு கிடைத்த தல தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளார். ஜெ.அன்பழகன் அவர்கள் ஜெயம் ரவி நடித்த 'ஆதிபகவன்' என்ற படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டிற்கு அரசியல்வாதி ஒருவர் பாராட்டு தெரிவித்திருப்பது இதுதான் முதல்முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.