close
Choose your channels

தளபதியின் 'மெர்சல்' அட்டகாசமான போஸ்டருடன் சிங்கிள் பாடல் வெளியீடும் தேதி அறிவிப்பு

Wednesday, August 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சில வினாடிகளுக்கு முன் புதிய அட்டகாசமான போஸ்டருடன் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி 'மெர்சல் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக புதியதாக வெளியாகியுள்ள போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் சிங்கிள் பாடலின் முதல் வரி 'ஆளப்போறான் தமிழன்' என்று இருப்பது தற்போதைய தமிழக அரசியல் நிலைக்கு பொருத்தமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆள வேண்டும் என்று பல தலைவர்கள் வற்புறுத்தி வரும் நிலையில் விஜய் படத்தின் பாடலின் வரியாக 'ஆளப்போறான் தமிழன்'' என்று இருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.

மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள இந்த புதிய போஸ்டரில் விஜய் ஆக்ரோஷத்துடன் கையை உயர்த்தி கொண்டிருப்பது போன்றும் அவரை சுற்றி ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருப்பதும் போன்றும் காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.