close
Choose your channels

உதயநிதி-பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'ராஜதந்திரம்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவரும் சசிகுமாரின் 'கிடாரி' மற்றும் 'பலே வெள்ளையத்தேவா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவருமான தர்புகா சிவா இந்த படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ்-கெளதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆன மலையாள திரைப்படமான 'மகேஷிண்டே பிரத்திகரம்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.