close
Choose your channels

'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஓப்பனிங் வசூல் எப்படி?

Monday, July 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதிலும் உமாபதியின் நடனம் மற்றும் நடிப்பு பாராட்டப்படும் வகையில் இருந்ததாக விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்த படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் 10 திரையரங்குகளில் 41 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.3,18,720அ வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரி ஓப்பனிங் வசூலை இந்த படம் பெற்ற போதிலும் இன்று முதல் நடைபெறும் திரையரங்குகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் வசூலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காலவரையற்ற வேலைநிறுத்தம் என்பதால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் இந்த படம் திரையிடப்படுமா? என்பது சந்தேகமே என்பது படகுழுவினர்களுக்கு ஒரு சோகமான செய்தியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.