close
Choose your channels

கமல், ரஜினி பாணியில் களமிறங்கும் விஜய்மில்டன்

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்வதே என்று திரையுலகினர் கூறுவதுண்டு. அந்த வகையில் விஜய்மில்டன் இயக்கிய 'கோலி சோடா' திரைப்படம் சுமார் ரூ.2 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு சென்னையில் மட்டுமே ரூ.3 கோடி வசூல் செய்தது. தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய்மில்டன் 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் 'கடுகு' என்ற வெற்றி படத்தை இயக்கிய விஜய்மில்டன் 'கோலி சோடா 2' படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

'கோலிசோடா' படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, குட்டிமனி ஆகிய நான்கு சிறுவர்கள் தற்போது இளைஞர்களாக இருப்பதால் அதற்கேற்ப திரைக்கதை அமைக்கப்படும் என தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

ரஜினியின் '2.0', கமலின் 'விஸ்வரூபம் 2' உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இரண்டாம் பாக படத்தை விஜய்மில்டன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.