close
Choose your channels

விஜய்சேதுபதியின் 25வது படத்தின் டைட்டில் அறிவிப்பு

Friday, April 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவரும் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை வெளியிட்டு வருபவருமான நடிகர் விஜய்சேதுபதி தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை தொட்டுவிட்டார். இவரது 25வது படத்திற்கு 'சீதக்காதி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சென்னையில் சிறப்பாக நடந்தது.

இயக்குனர் பாலாஜி தரணீதரன் ஏற்கனவே 'ஒரு பக்க கதை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் அந்த படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.