close
Choose your channels

'தலைவா' படத்துடன் கனெக்ஷன் ஆகும் 'புலி'

Monday, August 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் இன்னும் மூன்று நாட்களில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தை செப்டம்பர் 17ல் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.


தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த பணிகள் முடிந்தவுடன், படத்தை சென்சாருக்கு அனுப்பவேண்டியது மட்டுமே பாக்கி என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தின் டிரைலருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி 'புலி' படத்தின் டிரைலர் வெளியாகவுள்ள நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 20ஆம் தேதிதான் விஜய்யின் 'தலைவா' படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீஷ், நந்திதா ஸ்வேதா, வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.