close
Choose your channels

'பைரவா' பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் விக்ரம்

Thursday, August 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை', சிவாஜி கணேசன் நடித்த 'வாணி ராணி', ரஜினிகாந்த் நடித்த 'உழைப்பாளி', அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'பைரவா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரடொக்சன்ஸ். இந்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் கூறிய கதை விக்ரமுக்கு பிடித்ததை அடுத்து இந்த புதிய கூட்டணி இணைந்துள்ளது.

விக்ரம் தற்போது 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ஹரியின் 'சாமி 2' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை அடுத்து அவர் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.