close
Choose your channels

'விவேகம்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதியை அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் காத்திருத்தலுக்கு தற்போது முடிவு கிடைத்துவிட்டது.

ஆம், 'விவேகம்' படத்தின் இசை வெளியீடு வரும் 7ஆம் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களின் முன்னோட்டம் வெளியாகி இணையதளத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அனிருத், ராஜகுமாரி பாடிய நெவர் எவர் கிவ் அப் பாடல், பிரதீப்குமார், சாஷா திருப்பதி பாடிய 'காதலாடா' பாடல், மானசி, பூர்வி கெளதிஷ் பாடிய 'வெறியேற' பாடல், அனிருத் ஹரிஷ் சுவாமிநாதன் பாடிய 'தல விடுதல', அனிருத், சாஷா, நம்ரிதா, பூஜா ஆகியோர் பாடிய 'காதலாட' பாடல் ஆகிய பாடல்களின் ஓரிரு வரிகள் இந்த முன்னோட்டத்தில் உள்ளது.

இந்த முன்னோட்டத்தை வைத்து பார்க்கும்போது இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக 'வெறியேற' என்று தொடங்கும் பாடலில் உள்ள 'தீ வருந்திட நீ எழுந்திட வான் அதிர்ந்திட கண் சிவந்திட மண் அசைந்திட ... இரு கரங்களில் இடி இறங்கிட வீரா நீ வாடா வா...போன்ற வரிகள் இன்னும் சில காலம் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.