close
Choose your channels

'விவேகம்' இயக்குனரின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார்?

Sunday, April 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. தற்போது பல்கேரியாவில் உள்ள 'விவேகம்' படக்குழுவினர் வரும் 19ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என்றும், அதன் பின்னர் முழுவேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'விவேகம்' படத்தை அடுத்து இயக்குனர் சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ரஜினிகாந்த் தற்போது '2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக உள்ளது.

இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால் '2.0' படத்திற்கு பின்னர் அவர் எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.