close
Choose your channels

வாடிவாசலுக்கு முன்பே வெற்றிமாறனின் இன்னொரு படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, April 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் அடுத்த படத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் படங்களை இயக்குவது மட்டுமின்றி சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி சில படங்களுக்கு கதை வசனம் எழுதி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வெற்றிமாறன் கதை வசனத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்க உள்ள நிலையில் இது குறித்த புகைப்படமும் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது: வெற்றி மாறன் திரைக்கதையில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அவரது திரைக்கதையை கேள்விப்பட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். . வெற்றிமாறன் அவர்கள் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஏற்கனவே அறிவித்த 2 படஙக்ளுக்கு பிறகு இந்த படத்தில் பணிபுரிய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றிமாறன் அவர்களுக்கும், இந்த படத்தை தயாரிக்கும் கதிரேசன் அவர்களுக்கும் எனது நன்றி’ என தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ மற்றும் ‘ஹண்டர்’ ஆகிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment