close
Choose your channels

ரஜினிக்கு 'சந்திரமுகி', விஜய்க்கு 'தளபதி 61'. தயாரிப்பாளர் முரளி ராமசாமி

Sunday, April 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. குறிப்பாக 'பாபா' என்ற தோல்வி படத்திற்கு பின்னர் ரஜினி மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் யானை இல்லை குதிரை, விழுந்தா டக்குன்னு எழுந்திருச்சிருவேன்' என்று சொன்னதை செய்து காட்டிய படம் 'சந்திரமுகி. இந்த படம் சென்னை சாந்தி திரையரங்கில் புதிய வரலாறு படைத்தது.

இந்நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தயாரிப்பாளரும் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன் அவர்களின் மகனுமான முரளி ராமாசாமி சமீபத்தில் கூறியபோது, ராமராஜனுக்கு ஒரு 'கரகாட்டக்காரன்', பிரபுவுக்கு ஒரு 'சின்னத்தம்பி, 'ரஜினிக்கு ஒரு சந்திரமுகி வெற்றி படம் போல, விஜய்க்கு 'தளபதி 61' படம் நிச்சயம் அமையும்' என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியபோது, 'இதை நான் பட்ஜெட்டை மனதில் வைத்து சொல்லவில்லை. ஸ்கிர்ப்டை மனதில் வைத்து சொல்கிறேன். நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்கும் படமாக இது இருக்கும் 'என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் முரளி ராமசாமி கூறியதை போல வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ள 'விஜய் 61' விஜய்க்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.