அடித்தது ஜாக்பாட்…ஒரு லாட்டரியில் ரூ.20 கோடி வென்ற இந்தியர்!!!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் லாட்டரி குலுக்கல் என்பது மிகவும் வரவேற்பு கொண்ட ஒரு விஷயமாகப் பார்க்கப் படுகிறது. காரணம் அங்கு நடக்கும் லாட்டரி குலுக்கல்களில் ஜெயிப்பவர்களுக்கு 10-12 மில்லியன் திராம் (இந்திய மதிப்பில் ரூ.20) கோடி கிடைக்குமாம். அதனால் இந்த வகையான லாட்டரி டிக்கெட்டுகளை பலரும் விரும்பி வாங்குகின்றனர். தற்போது இந்தியர் ஒருவர் “பிக் டிக்கெட் ரேபில் டிரா” லாட்டரி குலுக்கலில் ஜெயித்து 10 மில்லியன் திராம் (இந்திய மதிப்பில் ரூ.19.90கோடி) களை வென்றுள்ளார்.

பிக் டிக்கெட் ரேபில் டிரா லாட்டரி குலுக்கல்களுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் துபாயில் வசித்துவரும் இந்தியரான குர்பிரீத் சிங் (35) வாங்கிய டிக்கெட் பரிசுத்தொகையை வென்றிருக்கிறது. ஐடி மேனேஜராக பணியாற்றி வரும் இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.

மேலும் இதுகுறித்து கருத்துக்கூறிய குர்பிரீத் சிங், நான் 5 வயது குழந்தையாக இருக்கும்போதே யுஏஇ விற்கு வந்துவிட்டேன். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த அமீரகம் தற்போது நம்பமுடியாத மெகா பரிசு பணத்தையும் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நான் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள பணத்தை வைத்து இங்கு சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளோம். பஞ்சாபில் வாழும் எனது பெற்றோரை இங்கு அழைத்து வரப்போகிறேன் என மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார். இதேபோல அபுதாயில் கடந்த 2018 இல் நடைபெற்ற ஒரு லாட்டரி டிக்கெட் குலுக்கலில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ரூ.20 கோடியை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

4 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட பலே கில்லாடிகள்!!! மோப்பம் பிடித்த போலீஸ்!!!

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா பகுதியில் 4 ஏக்கர் விளைநிலத்தில் கஞ்சா

ஆசிரியராகும் கனவு… 1,200 கி.மீ தூரத்தை மொபட்டில் கடந்துவந்த கர்ப்பிணி பெண்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை, தேர்வு எழுதுவதற்காக 1,200

சூரரை போற்று' படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி

கேப்டன் யார் என்பதை காலம் முடிவு செய்யும்: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பெண் பிரமுகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசியூவில் கேக் வெட்டிய எஸ்பிபி: குடும்பத்தினர், டாக்டர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்