close
Choose your channels

28 நாளில் 18 ரிலீஸ்: பிப்ரவரியில் வரிசை கட்டும் படங்கள்

Tuesday, January 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இம்மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு வேறு புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் படங்கள் வரும் பிப்ரவரியில் வரிசை கட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் தேவ், வந்தா ராஜாவாதான் வருவேன், சர்வம் தாளமயம், பேரன்பு, கண்ணே கலைமானே, களவாணி 2, பூமராங், வர்மா, 100% காதல், கழுகு 2, ஐங்கரன், பஞ்சாட்சரம், திருமணம், தாதா 87, வாண்டு, அக்னி vsதேவி, சகா, பொதுநலன் கருதி, ஆகிய 18 படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இவற்றில் மூன்று அல்லது நான்கு படங்கள் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அம்மாதத்தில் 18 படங்கள் வெளியாவது சினிமா துறைக்கு ஆரோக்கியமா? என சிந்திக்க வேண்டிய நேரமிது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.