close
Choose your channels

சசிகுமார் படத்திற்கு கிடைத்த 'பலே' சான்றிதழ்

Friday, December 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கிடாரி' வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்துள்ள 'பலே வெள்ளைத்தேவா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த படம் சென்சார் ஆனதை அடுத்து வரும் டிசம்பர் 23ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவருவது உறுதியாகியுள்ளது.

சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார். 'கிடாரி' இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை சசிகுமாரின் 'கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.