'96' ஜானுவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபீசில் வசூலை அள்ளிக்குவித்தது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அதேபோல் இந்த படத்தில் இளமையான த்ரிஷா வேடத்தில் நடித்த கவுரி கிஷானுக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

ஜானு கேரக்டரை அப்படியே உள்வாங்கி மிக இயல்பாக நடித்த கவுரிக்கு தற்போது நாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், பிரபல மலையாள நடிகர் சன்னிவெய்ன் ஹீரோவாக நடிக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற மலையாள திரைப்படத்தில் இவர்தான் நாயகி. இந்த படத்தை பிரின்ஸ் ஜாய் என்பவர் இயக்கவுள்ளார்.

96 படம் போலவே இந்த படமும் நம் வாழ்க்கையை நெருக்கமாக வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கவுரி தெரிவித்துள்ளார். கவுரி ஒரு ஜர்னலிசம் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணத்திற்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன விஜய் நாயகி

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில அறிமுகமான நடிகை ஜெனிலியா, விஜய் நடித்த 'சச்சின்' மற்றும் வேலாயுதம் உள்பட பலதிரைப்படங்களில் நடித்தார்.

போலீசாரின் மெத்தனத்தால் உயிரோடு எரிக்கப்பட்ட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீடூ உள்பட பல வழிகள் இருந்தாலும் தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

அவதூறு வழக்கால் கிரிக்கெட் வீரர் பெற்ற மிகப்பெரிய தொகை

ஆஸ்திரேலியாவில் பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ்ட் கெயில் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் அவருக்கு $220 ஆயிரம் நஷ்ட ஈடாக கிடைத்துள்ளது.

லைகா நிறுவனம் அறிவித்த அதிகாரபூர்வ '2.0' வசூல் விபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது

கோலிவுட்டை நோக்கி வரும் ஹாலிவுட் நடிகைகள்

பத்து வருடங்களுக்கு முன் கோலிவுட் என்ற ஒரு திரையுலகம் இருந்ததே ஹாலிவுட் கலைஞர்களுக்கு தெரியாது.