close
Choose your channels

'கோட்' படத்தில் சிஎஸ்கே ரசிகராக நடிப்பது இந்த பிரபலமா? தரமான சம்பவம் இருக்குது..!

Tuesday, April 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் சிஎஸ்கே அணியின் ரசிகராக பிரபலம் ஒருவர் நடித்திருப்பதாக தகவல் வெளிவந்திருப்பதை அடுத்து இந்த படத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் அடுத்த கட்டமாக தற்போது படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்று உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது சிஎஸ்கே ரசிகராக பிரபலம் ஒருவர் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த பிரபலம் இயக்குனர் வெங்கட் பிரபு தான் என தற்போது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வெங்கட் பிரபு தான் இயக்கிய ’மங்காத்தா’ உள்பட சில படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்த நிலையில் தற்போது ‘கோட்’ படத்திலும் அவர் சிஎஸ்கே ரசிகராக நடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கோட்’ படத்தின் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.