close
Choose your channels

தனுஷ் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் இன்னொரு நபர்.. இயக்குனர் யார் தெரியுமா?

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் குடும்பத்தில் ஏற்கனவே கஸ்தூரிராஜா, செல்வராகவன் என மூன்று நபர்கள் திரையுலகில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு நபர் திரையுலகிற்கு வர இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் என்பதன் பிரபல இயக்குனராக செல்வராகவன் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனுஷின் சகோதரி மகன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாகவும், தனுஷ் தற்போது இயக்கி வரும் ’D50’ படத்தை இயக்கி முடித்தவுடன் தனது அக்காள் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவருமே சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.