close
Choose your channels

'தளபதி 66' படத்திற்காக பிரமாண்ட செட்: எங்கே தெரியுமா?

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் பிரம்மாண்டமான மால் செட்டில் தான் நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த செட்டில் தான் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்கவுள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், விவேக் பாடல் வரிகளில், தமன் இசையில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.