close
Choose your channels

வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை துரத்திய தமிழ் நடிகை!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை தமிழ் நடிகை ஒருவர் துரத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வரும் நிலையில் இவரது வீட்டில் 19 வயது தனுஷ் என்பவர் கடந்த 5 மாதங்களாக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனுஷ், நிக்கி கல்ராணியின் வீட்டில் உள்ள பொருட்களை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றபோது, தனுஷை நிக்கி கல்ராணி துரத்திப் பிடிக்க முயன்றும் அவர் தப்பிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நிக்கி கல்ராணி சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனுஷை தேடிவந்தனர். தனுஷ் திருப்பூரில் இருப்பதாக அறிந்து அவரை திருப்பூர் சென்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.