close
Choose your channels

கவுண்டமணிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு.. 20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

Friday, March 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்து விவகாரம் காரணமாக 20 ஆண்டுகளாக நடிகர் கவுண்டமணி சட்ட போராட்டம் நடத்திய நிலையில் இன்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தவர் கவுண்டமணி என்பதும் அவர் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி கடந்த 1998 ஆம் ஆண்டு கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் வீடு கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 2200 சதுர அடி நிலத்தை கொடுத்து அதில் 15 மாதங்களில் வணிக வளாக கட்டிட பணியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த பணிகளுக்காக அவர் ரூ.3.58 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தார் என்பதும் அதில் அவர் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் வரை செலுத்தி விட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் கட்டுமான பணிகளை தொடங்காமல் அந்த நிறுவனம் இழுத்தடித்து வந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கவுண்டமணியிடம் இருந்து பெற்ற நிலத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கவுண்டமணி இடம் நிலத்தை ஒப்படைக்கும் நாள் வரை மாதம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அறக்கட்டளை நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில் இன்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், முந்தைய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நடிகர் கவுண்டமணி 20 ஆண்டு சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.