close
Choose your channels

19 வருட கனவு நனவாகியது… இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்ட நடிகர் ஜெய்!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் ஈர்த்த நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெய். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பகவதி“ படத்தில் விஜய்க்குத் தம்பியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து “சென்னை 28“, “சுப்பிரமணியபுரம்“, “எங்கேயும் எப்போதும்“, “கலகலப்பு 2” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய இயல்பான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ஜெய். இவர் தற்போது “ஈஸ்வரன்“ படத்தின் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தொடர்ந்து 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் “குற்றமே குற்றம்“ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது “சிவ சிவா“ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதோடு இந்தப் படத்தின் இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் அதில் இடம்பெற்ற பிஜிஎம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது. அதையடுத்து நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த தகவலையும் தமிழ் ரசிகர்கள் தெரிந்து கொண்டு அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை “சிவ சிவா” படத்தில் இடம்பெற்ற “காட முட்டை” எனும் பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இதையடுத்து நடிகர் ஜெய் “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். அது இன்பான நிகழ்வு. இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது“ என்று நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

சிவ சிவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவரைத் தவிர நடிகர் பால சரவணன், காளி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், சந்துரு உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தை லெண்டி ஸ்டூடியா சார்பாக எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து வருகிறார். மேலும் “பிரேக்கிங் நியூஸ்“, “எண்ணித் துணிக“, “பார்டி“ போன்ற திரைப்படங்களில் நடிகர் ஜெய் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.