close
Choose your channels

அது அவ்வளவு ஈஸி இல்லைங்க.. 'தளபதி 67' படம் குறித்து கார்த்தி!

Wednesday, October 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களின் கேரக்டர்கள் இடம்பெறும் என்று கூறப்படும் நிலையில் இதுகுறித்து நடிகர் கார்த்தி நேற்று நடந்த ‘சர்தார்’ வெற்றி விழாவில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான ’கைதி’ படத்தின் டெல்லி கேரக்டர் ஒரே ஒரு காட்சியில் இடம்பெற்றது என்பது தெரிந்ததே. அதே போல் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் ரோலக்ஸ் மற்றும் டெல்லி கேரக்டர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் சினிமா யூனிவர்ஸ் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருவதால் லோகேஷின் அடுத்த படமான ’தளபதி 67’ படத்திலும் ரோலக்ஸ், டெல்லி கேரக்டர்கள் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’சர்தார்’ வெற்றி விழாவில் ‘தளபதி 67’ படத்தில் கார்த்தியின் டெல்லி கேரக்டர் உண்டா? என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்தி ’அது அவ்வளவு ஈஸி இல்லைங்க’ என்று கூறினார். இரண்டு திரைப்படங்களையும் வேறுவேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர் என்றும், வேறு வேறு உரிமைகள் உள்ளது என்றும் கூறினார்.

எனவே ’தளபதி 67’ படத்தில் டெல்லி கேரக்டரை இணைப்பது அவ்வளவு ஈஸி இல்லை என்றும், எல்லோருக்கும் ஆசை இருக்கலாம் ஆனால் அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்பதை அவர் உறுதி செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.