close
Choose your channels

தமிழ்த் தேசிய புலிகள் கட்சி: தமிழ் நடிகர் ஆரம்பித்த கட்சியின் பெயர்!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், சரத்குமார், சீமான், டி ராஜேந்தர் உள்பட பல தமிழ் திரையுலக நடிகர்கள் அரசியல் கட்சிகள் தொடங்கி நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நடிகர் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். இவர் திடீரென இன்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். சற்றுமுன் அவர் செய்தியாளர்களிடம் ’தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்சூர் அலிகான் ஆரம்பித்துள்ள தமிழ் தேசிய புலிகள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் இருந்து மேலும் ஒரு நடிகர் ஆரம்பித்த கட்சிக்கு வரவேற்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.