close
Choose your channels

மனைவி, குழந்தையுடன் கூடிய க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நகுல்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான நகுல் குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் நகுல், அதன்பின் ’காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ ’கந்தகோட்டை’ ’வல்லினம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’எரியும் கண்ணாடி’ ’வாஸ்கோடகாமா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் நகுல் கடந்த 2016ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2020ஆம் ஆண்டு அகிரா என்ற பெண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நடிகர் நகுல் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கூடிய கியூட் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment