தாங்க முடியலடா சாமி: 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை விமர்சித்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,March 31 2019]

விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலானோர் நல்ல விமர்சனத்தையும் ஒருசிலர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒருசில விமர்சகர்கள் இந்த படம் தொழில்நுட்ப ரீதியில் தரமான படமாக இருந்தாலும் கருத்து வடிவில் பார்த்தால் ஆபாசத்தின் உச்சகட்டம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' குறித்து குறிப்பிடுகையில், 'சூப்பர் டீலக்ஸ்' தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ... அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்' என்று கூறியுள்ளார்.

நடிகர் நட்ராஜின் இந்த விமர்சனத்திற்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. ஒரு டுவிட்டர் பயனாளி, 'நீங்க நடிச்ச போங்கு, என்கிட்டே மோதாதே, மிளகா' போன்ற காவியங்களை விடவா தாங்க முடியாம போச்சு? என்று பதிவு செய்துள்ளார்.

More News

தளபதி 63: நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபலம்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்தார்

'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்': பிரபல இசையமைப்பாளரிடம் கூறிய அஜித்

திரையுலகில் உள்ள ஒவ்வொரு கலைஞனுக்கு அஜித் படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். ஒருசிலருக்கு இந்த அதிர்ஷ்டம் உடனேயும், சிலருக்கு பல வருடங்கள் கழித்தும் கிடைப்பதுண்டு

முதல்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் ராகுல்காந்தி!

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான போது அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது

நயன்தாரா படத்தை ரீமேக் செய்யும் 'தோனி' இயக்குனர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்த மலையாள் திரைப்படம் 'புதிய நியமம்'.

ஜெயலலிதா கேரக்டருக்கு அவர் செட்டாக மாட்டார்: ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா' பொருந்தமாட்டார் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.