close
Choose your channels

தளபதி 63: நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபலம்

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்தார் என்பது குறித்து வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் அப்பா கேரக்டரில் நடித்து வருவதாக பேராசிரியரும் குணசித்திர நடிகருமான கு.ஞானசம்பந்தம் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்தார். அவர் இந்த தகவலை தெரிவித்தவுடன் மாணவ, மாணவிகளின் கரகோஷம் விண்ணை பிளந்தது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தளபதி 63' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.