close
Choose your channels

தாங்க முடியலடா சாமி: 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை விமர்சித்த பிரபல நடிகர்

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலானோர் நல்ல விமர்சனத்தையும் ஒருசிலர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒருசில விமர்சகர்கள் இந்த படம் தொழில்நுட்ப ரீதியில் தரமான படமாக இருந்தாலும் கருத்து வடிவில் பார்த்தால் ஆபாசத்தின் உச்சகட்டம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' குறித்து குறிப்பிடுகையில், 'சூப்பர் டீலக்ஸ்' தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ... அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்' என்று கூறியுள்ளார்.

நடிகர் நட்ராஜின் இந்த விமர்சனத்திற்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. ஒரு டுவிட்டர் பயனாளி, 'நீங்க நடிச்ச போங்கு, என்கிட்டே மோதாதே, மிளகா' போன்ற காவியங்களை விடவா தாங்க முடியாம போச்சு? என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.